News November 29, 2024

2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

image

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 27, 2025

மாற்றப்படும் அமைச்சரவை.. வெளியான புதிய தகவல்!

image

தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகியுள்ளது. உதகையிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 27, 2025

தலைமறைவான பாகிஸ்தான் ராணுவ தளபதி?

image

இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானின் ராணுவ தளபதி காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சையத் அசிம் முனிர் இன்னும் பொதுவெளியில் எதுவுமே பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டி இத்தகவல் பேசப்படுகிறது. அவர் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமான நேரத்தில் ராணுவ தளபதி தலைமறைவாகி இருப்பது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

News April 27, 2025

செந்தில் பாலாஜி திடீர் ட்விஸ்ட்.. CM ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

image

அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள செந்தில் பாலாஜி CM ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாகத் தனது தீவிர ஆதரவாளரும், அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்தவருமான இளங்கோவுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கக் கோரியுள்ளாராம். இதனால், கரூரில் அமைச்சர் பிரதிநிதித்துவம், இருப்பதோடு கட்சியைப் பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

error: Content is protected !!