News November 28, 2024

மழைக்காலத்தில் இதை செய்ய மறவாதீர்

image

மழைக்காலத்தில் நோய் பரவல் அதிகமாக இருக்கும். எனவே நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் மீது அதிக கவனம் தேவை. குறிப்பாக மழைக்காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் ஏற்படவில்லை என்பதால் உடலுக்கு தண்ணீர் தேவையில்லை என்று அர்த்தமில்லை அதிக தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Similar News

News August 20, 2025

பட்டுக்கோட்டையில் போட்டி? TTV தினகரன் பதில்

image

2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவதாக TTV தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக, பாஜக கூட்டணியில் போட்டியிடுமா என்பது டிசம்பர் இறுதியில் தெரியவரும் என்று TTV கூறியுள்ளார். அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அமமுக NDA-விலேயே உள்ளதாக நயினார் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து பாஜகவிடம் கேளுங்கள் என EPS கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ₹73,440-க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ₹9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.

News August 20, 2025

தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் மோடி: H ராஜா

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.

error: Content is protected !!