News March 22, 2024

தமிழகத்தில் இதுவரை 208 வழக்குகள் பதிவு

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில் இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Similar News

News October 23, 2025

பருவமழை எதிரொலி: சுமார் 88% தண்ணீர் சேமிப்பு!

image

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.

News October 23, 2025

அக்.28-ல் தமிழகம் வரும் துணை ஜனாதிபதி

image

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக, வரும் 28-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தான் பிறந்த ஊரான திருப்பூருக்கு செல்லும் நிலையில், அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் CPR, தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக செல்கிறார்.

News October 23, 2025

நிவாரணம் பற்றி பேச EPS-க்கு அருகதை இல்லை: சேகர்பாபு

image

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.

error: Content is protected !!