News November 25, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) சிரிக்க வைக்கும் வாயு – நைட்ரஸ் ஆக்சைடு 2) BIS – Bureau of Indian Standards 3) இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி – கிரண் பேடி 4) ராஜ நாகத்தின் அறிவியல் பெயர் – ஓபியோபகஸ் ஹன்னா 5) ‘கடல் புறா’ நூலின் ஆசிரியர் – சாண்டில்யன் 6) முதல் கர்நாடகப் போர் 1746-1748 வரை நடந்தது 7) நிலவில் காலடி எடுத்து வைத்த 2ஆவது மனிதர் – எட்வின் ஆல்ட்ரின் 8) உலக அளவில் அதிக கார் திருட்டு நடக்கும் நாடு – USA.

Similar News

News August 19, 2025

கம்யூ., கட்சிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்: முத்தரசன்

image

கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஐ செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஐ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து போன கட்சி என விமர்சிக்கும் அவர், கூட்டணிக்காக மட்டும் எதற்காக ரத்தினக் கம்பளம் விரிப்பதாக கூறுகிறார் என்றார்.

News August 19, 2025

ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

image

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.

News August 19, 2025

கழுத்து வலியை விரட்ட உதவும் மர்ஜாரியாசனா!

image

✦கழுத்து வலி மட்டுமன்றி வயிறு தொப்பையும் குறையும்.
➥தரையில் முழங்காலிட்டு, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைக்கவும். முழங்கால்கள் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும்.
➥மூச்சை உள் இழுத்து, முதுகை வளைத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தவும். தலையை மேலே உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥பிறகு, மூச்சை வெளியேற்றி, முதுகை மேல்நோக்கி வளைத்து, வயிற்றை உள்ளிழுத்து, தலை & தோள்களை கீழே இறக்கவும்.

error: Content is protected !!