News November 24, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2023 – 24இல் 11,096 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022 – 23இல் 10,354 கோடி யூனிட்களாக இருந்தது. ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணங்களாக அமைந்து உள்ளன. தினசரி 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்த ஆண்டு ஏப். 30இல் அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
Similar News
News December 26, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹10,000.. உடனே விண்ணப்பிக்கவும்!

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (டிச.26) நிறைவடைகிறது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், உடனே விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News December 26, 2025
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கனடாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி, Toronto Scarborough பல்கலை.,-க்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவஸ்தியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இந்த ஆண்டின் 41-வது கொலை சம்பவம் இது என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
News December 26, 2025
மோசடியில் சிக்கினார் ஜிவி பிரகாஷ்

சைபர் கிரிமினல்களின் மோசடி வலையில் தற்போது பிரபலங்களும் சிக்க தொடங்கியுள்ளனர். தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் தேவை என SM-ல் கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் ₹20,000 அனுப்பி உதவியுள்ளார். ஆனால், அந்த நபர் 5 ஆண்டு பழைய போட்டோவை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தின் மீதான ஆசையில் தாய் இறந்ததாக கூறிய அந்த அருவருப்பான நபரை போலீஸ் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.


