News November 22, 2024
ஜார்க்கண்டில் முடிசூடப் போவது யார்?

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. INDIA vs BJP கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை BJP-க்கு ஆதரவாக இருந்தாலும், INDIA கூட்டணி டஃப் ஃபைட் கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
Similar News
News October 23, 2025
EX அமைச்சர் பொன்முடிக்கு 30-ம் தேதி வரை கெடு

சைவம், வைணவம் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் பொன்முடி வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பொன்முடி சர்ச்சையாக பேசியதாக, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
News October 23, 2025
‘பவுத்தி பட்டா’ பற்றி தெரியுமா?

வருவாய் கிராமத்தில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் நடைமுறை இருந்தது. இது பவுத்தி பட்டா மாறுதல் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களாலும், வேலைப்பளுவாலும் மாற்றப்பட்டு முழுவதும் ஆன்லைன் வசம் சென்றது. பவுத்தி பட்டா நடைமுறையை மீண்டும் செயல்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் இனி பொதுமக்களின் வேலை எளிமையாகும்.
News October 23, 2025
BREAKING: விடுமுறை.. ஸ்பெஷல் அறிவிப்பு வெளியானது

தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, மழையால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை, முகூர்த்தம், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.24, 25-ல் பல்வேறு ஊர்களுக்கும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.26-ம் தேதி திருச்செந்தூருக்கும் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.