News November 22, 2024

ஹாஸ்பிட்டலில் குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

image

மேற்கு வங்கம் பங்குரா அரசு ஹாஸ்பிட்டல் கழிவறையில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விச் சென்றது. கடந்த 18ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பாஜக மாஜி அமைச்சர் பிரதிமா பூமிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 16, 2026

புதுகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அருணா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கலந்துகொண்டு இடுபொருட்கள் இருப்பு, வேளான் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 16, 2026

இன்று இந்த விளக்கு ஏற்றுங்க.. செல்வ செழிப்பு பெருகும்!

image

மாட்டுப் பொங்கலில் பசு மாடு இல்லாதவர்கள், பஞ்ச காவிய விளக்கு ஏற்றும்படி ஆன்மீகவாதிகள் அறிவுறுத்துகின்றனர். பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதே பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வழிபாட்டால், செல்வ செழிப்பு பெருகுமாம். அதேபோல, எங்கேனும் பசுக்களை பார்த்தால், ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது 30 முக்கோடி தேவர்களின் அருளையும் பெற்றுத் தரும்.

News January 16, 2026

ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

image

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!