News March 18, 2024
திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.02) இரவு முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
திருப்பத்தூர்: மேம்பால சுவர் மீது மோதி விபத்து!

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் இன்று (02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
News November 2, 2025
திருப்பத்தூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


