News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
இளையராஜாவுடன் கைகோர்த்த வேடன்!

இசைஞானி இளையராஜா இசையில் பிரபல பாடகர்கள் அறிவு மற்றும் வேடன் இணைந்திருப்பதாக ‘அரிசி’ படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் S.A.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் CPI Ex மாநில செயலாளரான முத்தரசன் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இளையராஜாவுடன் அறிவு மற்றும் வேடன் இருக்கும் புகைப்படத்தை படக்குழு புத்தாண்டையொட்டி இன்று வெளியிட்டுள்ளது.
News January 1, 2026
BREAKING: காய்ச்சல் மருந்துக்கு தடை.. அரசு அறிவிப்பு

இந்தியாவில் வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்காக பரவலாக பயன்படுத்தப்படும் Nimesulide மருந்தின் 100 Mg-க்கும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளுக்கு மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது. இதை பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்தான கல்லீரல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 கரும்பு வழங்குக: அன்புமணி

பொங்கல் கரும்பை உழவர்களிடம் இருந்து இடைத் தரகர்கள் இல்லாமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அன்புமணி வலியுறுத்தியுள்ளார். போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி தவிர மீதமுள்ள தொகை முழுவதும் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், கரும்புக்கான கொள்முதல் விலையை ₹50 ஆக உயர்த்த வேண்டும் என்றும், குடும்பத்திற்கு 2 கரும்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


