News November 24, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2023 – 24இல் 11,096 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022 – 23இல் 10,354 கோடி யூனிட்களாக இருந்தது. ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணங்களாக அமைந்து உள்ளன. தினசரி 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்த ஆண்டு ஏப். 30இல் அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
Similar News
News December 30, 2025
CINEMA 360° : ரீ-ரிலீஸ் ஆகும் ராஜமவுலியின் சூப்பர் ஹிட் படம்

*கேரளாவில் ஜனநாயகனின் முதல் காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *உலகளவில் ராஜமவுலியின் ‘நான் ஈ’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. *நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ 4 நாட்களில் ₹50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. *யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தில் ஹூமா குரேஷி கதாபாத்திரத்தின் பெயர் எலிசபெத் என படக்குழு அறிவித்துள்ளது.
News December 30, 2025
தூக்கிலிடும் வரை ஓயமாட்டேன்: உன்னாவ் பெண்

பாஜக Ex-MLA குல்தீப் சிங் செங்காரின் ஜாமினை நிறுத்தி வைத்த SC-ன் உத்தரவை வரவேற்பதாக <<18701955>>உன்னாவ் பாலியல்<<>> வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இன்று கூட MLA தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாகவும், அவரை தூக்கிலிடும் வரை நீதிக்கான தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் நீதி அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
ராசி பலன்கள் (30.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


