News April 21, 2025
700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News August 11, 2025
பாம்பன் பாலத்தில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதல் விபத்து

பாம்பன் சாலை பாலத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு காரும் இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 10, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

இன்று (ஆகஸ்ட் 10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 10, 2025
பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த எம்எல்ஏ

பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கள் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 10) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்தார். அப்போது, முதல்வரிடம் கொண்டு சென்று, விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.