News April 27, 2024
அழகிப் பட்டம் வென்ற 60 வயது பெண்

அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில், 60 வயது பெண் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லா பிளாட்டா நகரை சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ், 60 வயதிலும் அச்சு அசலாக இளம்பெண் தோற்றத்துடன் அழகாக காணப்படுகிறார். இதனால், அவர் பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவே, சிறந்த அழகியாக தேர்வாகி க்ரீடம் சூட்டப்பட்டார்.
Similar News
News August 11, 2025
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்: நிதின் கட்கரி

அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் வரி என்ற பெயரில் மற்ற நாடுகளை மிரட்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும், நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்த நாடாக மாறினால் நாம் யாரையும் மிரட்டமாட்டோம், ஏனெனில் அதையே நமது கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
கோலி, ரோகித் ஓய்வு பெற அழுத்தம்?

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்குப்பின் கோலி, ரோகித் ஓய்வு பெற BCCI அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 2027 ODI WC-ன் போது கோலிக்கு 39, ரோகித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை BCCI மறுத்துள்ளது. ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்திருந்தால் அவர்களே தெரிவித்து இருப்பார்கள் என BCCI மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 11 – ஆடி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.