News September 9, 2024

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும்: துரைமுருகன்

image

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். ஆளுமையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, பாலின பாகுபாடு காட்டாமல் அவர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 33% இடஒதுக்கீடு, இன்னும் நடைமுறையில் வராத நிலையில், 50% இடஒதுக்கீட்டை துரைமுருகன் வலியுறுத்துவது ஆச்சரியமளித்துள்ளது.

Similar News

News August 19, 2025

மீண்டும் தள்ளிப்போகும் ‘கைதி 2’?

image

லோகேஷ் கனகராஜை பெரிய டைரக்டராக மாற்றியது கைதி படம். கூலி படத்தை முடித்த கையுடன் அவர் ‘கைதி 2’ வேலையில் இறங்குவார் என கூறப்பட்ட நிலையில், அப்படம் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. லோகேஷ் அடுத்து ரஜினி- கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இரண்டில் எந்த படத்தை லோகேஷ் முதலில் இயக்க வேண்டும்?

News August 19, 2025

குழந்தைக்கு மாத்திரை தரும் போது கவனமா இருங்க!

image

குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிறு மாத்திரை என்றாலும் அப்படியே கொடுப்பதால் பெரும் இன்னலை சந்திக்க நேரிடலாம். திருத்தணியில் மாத்திரையை அப்படியே முழுங்கியதால், சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கி, 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. மாத்திரையை பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News August 19, 2025

அதிமுகவுடன் கூட்டணி.. ராமதாஸ் ஆதரவாளர்கள் குரல்

image

அதிமுக கூட்டணியில் அன்புமணி, திமுக கூட்டணியில் ராமதாஸ் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸூக்கு வழங்கியபோதும், பின்னர் நீங்கள் (நிர்வாகிகள்) விரும்பும் கூட்டணியை அமைப்பேன் என்று ராமதாஸ் பேசியபோதும் ‘அதிமுக..அதிமுக..’ என கட்சி நிர்வாகிகள் குரல் எழுப்பினர். இதனால், கூட்டணி கணக்கு மாறுமா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!