News May 7, 2025
இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 22, 2025
பிரபல தமிழ் நடிகை மரணம்.. அதிர்ச்சித் தகவல்

தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா மரண வழக்கு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2002-ல் காதலருடன் விஷமருந்தி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகள் கேங்க் ரேப் செய்யப்பட்டதாக பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது மார்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். <<18341222>>நடிகையின் மரணம் தொடர்பான வழக்கு<<>> நேற்று SC-ல் விசாரணைக்கு வந்திருந்தது.
News November 22, 2025
திமுகவின் முட்டாள்தனத்தை பார்ப்போம்: அண்ணாமலை

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியதாக உதயநிதி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், நாட்டில் தமிழ் பல்கலைகளை விட சமஸ்கிருத பல்கலைகள் அதிகமாக இருப்பதால் அதிக நிதியை பெறுவதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். திமுகவால் வளர்ச்சி பற்றி பேச முடியாது என்று விமர்சித்த அவர், அடுத்த 6 மாதங்களுக்கு மொழி, வடக்கு, தெற்கு போன்ற முட்டாள்தனங்களை பார்க்கலாம் என்றும் சாடியுள்ளார்.
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021 தேர்தல் போலவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.


