News November 21, 2024
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்?.. உண்மை என்ன

தமிழ்நாட்டில் புதிதாக கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் இதை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
ரீ-ரிலீஸில் கில்லியை ஓரங்கட்டிய படையப்பா!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘படையப்பா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ₹4.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரீ-ரிலீஸில் முதல் நாளில் அதிகம் வசூல் படம் என்ற பெருமையையும் ‘படையப்பா’ பெற்றுள்ளது. முன்னதாக, விஜய்யின் ‘கில்லி’ ₹3.1 கோடி வரை வசூலித்திருந்ததே ரெக்கார்டாக இருந்தது.
News December 13, 2025
TN-ல் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா? R.S.பாரதி

அதிமுகவினர் திமுகவுக்கு போவார்களா, நடிகர் கட்சிக்கு போவார்களா என்ற குழப்பத்தில் EPS இருப்பதாக R.S.பாரதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக 8 முறை PM மோடி, தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை; அதேபோல், அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், SIR நடவடிக்கையால் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினம் இன்று!

நாட்டின் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில், யாரும் எதிர்பாராத வகையில் 2001 டிச.13-ம் தேதி, LeT, JeM அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சல், விவேகத்தின் காரணமாக இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 9 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டார்.


