News September 30, 2025
தொடர்ந்து 5 நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு

அக்.1 (புதன்) ஆயுதபூஜை, அக்.2 விஜயதசமி ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை நாள்களாகும். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றுவரும் வகையில், வெள்ளிக்கிழமை (அக்.3) அன்றும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறைகளாக இருப்பதால், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு அலுவலர்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News September 30, 2025
ஆயுத பூஜை வாழ்த்துகள் சொல்லிட்டீங்களா..

*தொழில் சிறக்க, வளம் பெருக இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். *இந்த ஆயுத பூஜை நன்நாளில் நீங்கள் தொடங்கும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள். *தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் தேவையான கருவிகளை இந்நாளில் தவறாமல் பூஜை செய்து வணங்குவோம். *நீங்கள் செய்யும் தொழில் செழித்தோங்க நல்வாழ்த்துகள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதை தவறாம அனுப்புங்க..
News September 30, 2025
மோடி லடாக்கிற்கு துரோகம் செய்கிறார் – ராகுல் காந்தி

கார்கிலில் ராணுவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பிரதமர் மோடி லடாக்கிற்கு செய்யும் துரோகம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அந்தஸ்து கோரி போராடும் லடாக் மக்களுடன், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News September 30, 2025
Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.