News May 17, 2024
39% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

நாடு முழுவதும் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகள் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், மே 25இல் நடைபெறும் ஆறாவது கட்டத் தேர்தலில், மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 338 பேர் (39%) கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹6.21 கோடியாக உள்ளது.
Similar News
News November 25, 2025
ஆரோக்கியமா இருக்க இந்த ஒரு சூப் குடிங்க போதும்!

குளிர்காலங்களில் சூடாக குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு சூப். அதிலும் பூசணிக்காய் சூப்பில் வைட்டமின் A, C, நார்ச்சத்து என பல சத்துக்கள் உள்ளதால், பல்வேறு நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *கண் பார்வையை அதிகரிக்கிறது *தோலுக்கு நல்லது *எடையை குறைக்க உதவுகிறது *உடலின் நீர்ச்சத்துக்கு உதவுகிறது.
News November 25, 2025
திமுக ஒரு மதவாத கட்சி: ஜெயபிரகாஷ்

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே, உதயநிதி சமஸ்கிருதத்தை பற்றி பேசுகிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தற்போது வகுப்புவாத கட்சியாக மாறிவிட்டது என்று விமர்சித்த அவர், திமுக ஆட்சியில் CM முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இந்துக்களை மிகவும் மோசமாக தரம்தாழ்த்தி பேசுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.
News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..


