News March 16, 2024
அதிரடியாக 38 சாராய வியாபாரிகள் கைது

நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீசார் இன்று அதிரடியாக சாராய வேட்டை நடத்தினார். இதில், 38 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் 90 மில்லி அளவுள்ள 50 மதுபாட்டில்கள் 180 மில்லி அளவுள்ள 105 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இத்தகவலை போலீஸ் சூப்ரண்ட் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 13, 2025
நாகூர்: 100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி சந்தனக்கூடு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நவ.21-ம் தேதி முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
நாகை: அரசு பேருந்து மோதி டாக்டர் பலி

நாகை அருகே கீழ்வேளூர் கிழக்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் திருமலை செல்வர். மருத்துவரான இவர் நேற்றிரவு திருவாரூரில் இருந்து கீழ்வேளுருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்வேளுர் அரசாணி குளம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், திருமலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


