News March 31, 2025
சரிந்த 33 மாடி கட்டிடம்.. எல்லோரும் இறந்துவிட்டனர்!

மியான்மரைத் தாக்கிய பூகம்பத்தின்போது, தாய்லாந்தின் பாங்காக்கில் 33 மாடி, கட்டி முடிக்கப்படாத கட்டிடம் நொறுங்கி விழுந்தது. பாங்காக்கில் வேறு எந்த Skyscraperம் இப்படி அழிவை சந்திக்கவில்லை. இதுவரை 17 பேர் இறந்தவிட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 83 பேரும் உயிரிழந்திருக்கும் கூடும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இதைக் கட்டிய சீன பொறியியல் நிறுவனம் மீது பலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
Similar News
News January 16, 2026
ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: சச்சின் பைலட்

ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என்று சென்னையில் காங்., முக்கிய தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்று தனி வாக்கு சதவிகிதம் இருக்கிறது எனக்கூறிய அவர், பல கட்சிகள் கேட்பதுபோலத்தான், காங்., நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர் என்றும், பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
விளம்பர கூட்டணியில் நடிகர் அஜித்குமார்

நீண்ட காலமாக விளம்பரத் துறையில் இருந்து விலகியிருந்த அஜித்குமார், தற்போது ‘Campa Energy’ என்ற விளம்பரத்தில் நடித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதற்காக Reliance Consumer Products (RCPL) நிறுவனத்துடன் AK Racing குழு ஒப்பந்தத்தில் (கூட்டணி) கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ‘Campa Energy’ பிராண்ட், AK Racing-ன் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News January 16, 2026
படத்தை பார்த்து விவகாரத்தை கைவிட்ட தம்பதி!

பொங்கலுக்கு வெளியான சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’, ₹190 கோடி வசூலித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தை பார்த்த ஒரு தம்பதி, அவர்களின் Divorce-யே கைவிட்டுள்ளனராம். ‘அம்மா சென்டிமென்ட்’ காட்சிகளை கண்டு மனம் மாறி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனராம். இந்த தகவலை சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் பகிர, நெட்டிசன்கள் ஒருபக்கம் ஆதரவாகவும், மறுபக்கம் கிண்டலும் செய்து வருகின்றனர்.


