News March 31, 2025

சரிந்த 33 மாடி கட்டிடம்.. எல்லோரும் இறந்துவிட்டனர்!

image

மியான்மரைத் தாக்கிய பூகம்பத்தின்போது, தாய்லாந்தின் பாங்காக்கில் 33 மாடி, கட்டி முடிக்கப்படாத கட்டிடம் நொறுங்கி விழுந்தது. பாங்காக்கில் வேறு எந்த Skyscraperம் இப்படி அழிவை சந்திக்கவில்லை. இதுவரை 17 பேர் இறந்தவிட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 83 பேரும் உயிரிழந்திருக்கும் கூடும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இதைக் கட்டிய சீன பொறியியல் நிறுவனம் மீது பலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

Similar News

News February 16, 2026

பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

image

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.

News February 16, 2026

தவெகவில் இணைந்த மேலும் ஒரு அதிமுக Ex MLA

image

தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின் பல அதிமுக Ex MLA-க்கள் தவெகவில் இணைந்து வருவது EPS-க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வரிசையில் வாசுதேவநல்லூர் அதிமுக Ex MLA மனோகரன் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து விஜய் கட்சியில் இணைத்துக் கொண்டார். வரும் நாள்களில் இன்னும் சில அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News February 16, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 611 ▶குறள்:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

error: Content is protected !!