News August 7, 2024
முதல் ஐந்து இடங்களில் 3 இந்திய வீரர்கள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளனர். கில், ரோஹித், கோலி ஆகியோர் முறையே 2,3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் 16 மற்றும் 20ஆவது இடத்தில் உள்ளனர்.
Similar News
News February 10, 2026
தேர்தலுக்கு புதிய ப்ளானை போடும் பாஜக, RSS

வரும் தேர்தலில் அரசியல் கட்சிகள் இதுவரை இல்லாத பல மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீமான், விஜய் பக்கம் இளைஞர்களின் வாக்கு செல்வதை தடுக்க, இந்த தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடந்த RSS – பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது.
News February 10, 2026
பிப்ரவரி 10: வரலாற்றில் இன்று

1969 – பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதி முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்.
1928 – மலையாளத் திரையுலகின் முதல் தலித் திரைப்பட கதாநாயகி பி.கே.ரோஸி பிறந்த தினம்
1919– நடிகர் சு. ராஜம் பிறந்த தினம்
1984- இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பிறந்த தினம்
1985 – பாடகி மகதி பிறந்த தினம்
2024- இயக்குநர், பாடலாசிரியர் திருமாறன் மறைந்த தினம்
News February 10, 2026
சற்றுநேரத்தில் ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியுள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வந்தவுடன் படக்குழு அடுத்தகட்ட அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


