News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 7, 2026
BREAKING: விலை ₹6,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாலையில் குறைந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹12, கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. ஆனால், மாலையில் கிராமுக்கு ₹6 குறைந்து ₹277-க்கும், கிலோவுக்கு ₹6,000 குறைந்து ₹2,77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருப்பதால், நம்மூரிலும் நாளை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 7, 2026
காவலாளி அஜித்குமார் மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், டிஎஸ்பி சண்முக சுந்தரம் முன்ஜாமின் கோரி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டிஎஸ்பியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
News January 7, 2026
₹831 கோடி.. ஹிந்தி சினிமா வரலாற்றில் உச்சம்!

பாலிவுட் ஸ்பை ஆக்ஷன் படமான ‘துரந்தர்’, உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் ரிலீஸ் ஆகாமலேயே, உலக அளவில் இப்படம் ₹1,222 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் மட்டும் ₹831.40 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி படங்களில் ‘புஷ்பா 2’-ஐ (₹822 கோடி) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.


