News August 5, 2024
ஷேக் ஹசீனாவை கண்காணித்த 29 ஆயிரம் பேர்

வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பயணித்த விமானத்தை பிளைட் ரேடார் 24 இணையதளத்தின் மூலம் அதிகம் பேர் கண்காணித்தது தெரியவந்துள்ளது. AJAX1413 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானம் உ.பி மாநிலம், ஹிண்டன் ராணுவ படை விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஷேக் ஹசீனா வானில் பயணித்த நேரத்தில், அவர் பயணித்த விமானத்தை 29 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கண்காணித்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
IPL திருவிழாவுக்கு சின்னசாமி ஸ்டேடியம் ரெடி!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற IPL கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் அங்கு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு RCB-யின் IPL ஆட்டங்கள் புனேவில் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த KSCA வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச மற்றும் IPL போட்டிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும்.
News January 17, 2026
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News January 17, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார்

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு காங்., தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில்<<18883890>> உயர்நிலைக் கூட்டத்தில்<<>> பங்கேற்றபின் பேசிய அவர், MP, MLA-க்களின் கருத்துகளை தலைமை கேட்டுக் கொண்டது என்றார். அதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு TN காங்கிரஸ் கமிட்டி கட்டுப்படும் எனவும் அவர் கூறினார்.


