News November 29, 2024
2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
கோழி இறைச்சி வாங்கப் பாேறீங்களா? இதுதான் விலை

நாமக்கல்லில் கறிக்கோழி 1 கிலோ (உயிருடன்) ₹88-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹85-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சென்னையில் கறிக்கோழி உயிருடன் கிலோ ₹130-₹150 வரையிலும், தோல் நீக்கிய கறி ₹200 வரையிலும் விற்பனையாகிறது. முட்டை விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹5ஆக விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் கோழி, முட்டை விலை என்ன?
News April 27, 2025
₹7.5 கோடி.. உலகின் பணக்கார பிச்சைக்காரர்..!

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயினுக்கு ₹1.4 கோடி மதிப்பில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அவரது நிகர மதிப்பு ₹7.5 கோடி. 2 கடைகளையும் அவர் வைத்துள்ளார். இவ்வளவு சொத்து சேர்த்தும் பிச்சை எடுப்பதை அவர் நிறுத்தவில்லை. மும்பை ஏர்போர்ட் முன்பு பிச்சையெடுக்கும் அவர், நாளொன்றுக்கு ₹2,000 – ₹2,500 என்ற வகையில் மாதம் ₹60,000 – ₹75,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.
News April 27, 2025
US வரி விதிப்பு : முதல் நாடாக கையொப்பமிடும் இந்தியா

இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 25% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்பின் அறிவிப்பு, 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்புக்குப் பிறகு US உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா உள்ளதாக US நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். முதற்கட்ட ஒப்பந்தம் செப்டம்பரில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.