News October 26, 2025
150 டிகிரிகள்.. பட்டங்களின் களஞ்சியமான சென்னை நபர்!

150 டிகிரிகளை முடித்துள்ள சென்னையை சேர்ந்த பேராசிரியர் VN பார்த்திபன் ‘பட்டங்களின் களஞ்சியம்’ என போற்றப்படுகிறார். தனது முதல் பட்டப்படிப்பில் ஜஸ்ட் பாஸானதை அடுத்து, தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் 1981-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அயராமல் படித்து வருகிறார். MA, MCom, MSc, ML, MPhil, MBA உள்ளிட்ட பல பட்டங்களை வாங்கியுள்ளவர், 200 பட்டங்களை பெறுவதே தனது இலக்கு என்கிறார்.
Similar News
News October 26, 2025
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் நாளை ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இது கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தவெக தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிற நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News October 26, 2025
வெளிநாட்டு கல்வி மோகம் குறைந்துவிட்டதா?

வெளிநாட்டுக் கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. 2024 ஆகஸ்டில் ₹3,688 கோடியாக இருந்த தொகை 24% சரிந்து, 2025 ஆகஸ்டில் ₹2,800 கோடியாக குறைந்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் கல்வியின் தரம் அதிகரித்திருப்பதை இதை காட்டுகிறது எனவும் RBI தெரிவித்துள்ளது.
News October 26, 2025
ரஜினி கதையில் விஜய் சேதுபதி!

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு, புது முகங்களை வைத்து சின்ன பட்ஜெட் படம் ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் அவர் ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி செய்து விட்டு, நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், தற்போது அதே கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.


