News August 10, 2024
ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ஆப்பிள்களை கடித்தல், குவளைகளில் பந்துகளை போடுதல், வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உதைத்தல் உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் இதுவரை சுமார் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதிமுகவை காக்கவும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவும் தான் தற்போது வரை போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி என்ற அவர், அண்ணன் எடப்பாடி ரெடியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 29, 2026
பெண்கள் பாதுகாப்பில் பொய் பேசும் CM: அண்ணாமலை

TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X-ல், சென்னையில் <<18991526>>அரசு கலைக்கல்லூரியில் பெண்<<>> ஒருவருக்கு 3 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், TN-ல் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொய் பேசும் CM ஸ்டாலின், இனியாவது உண்மையை உணர்ந்து பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News January 29, 2026
ரஜினி, கமல் படம்.. ரெடியாகும் மிரட்டலான புரோமோ

ரஜினி, கமல் இணையும் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் NTR படத்தை முடித்தவுடன், இப்படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளாராம். ஜெயிலர் 2-விற்கு மாஸான புரொமோ வெளியானது போல இப்படத்திற்கும் புரொமோஷூட் திட்டமிடப்பட்டுள்ளதாம். வரும் மார்ச் மாதத்தில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத்தின் இசையில் புரொமோஷூட் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


