News November 30, 2024
சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்

சென்னையில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
Similar News
News April 26, 2025
கோவையில் புயல்: ஆதவ்

மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான்; அதற்காக ஒரு புயல் இன்று கோவையை நெருங்கியுள்ளது என்று விஜய்யை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் இளைஞர்களால் உருவானது. தற்போது விஜய் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் தொடருகிறார்கள் என்பதால் 2026-இல் தவெக ஆட்சியைப் பிடிக்கும். அதற்கு இளம்பெண்கள் படை உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
News April 26, 2025
வருமா ‘வா வாத்தியார்’ ?

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இன்னும் சில நாள் கார்த்தியின் கால்ஷீட் வேண்டும் என இயக்குநர் நலன் குமாரசாமி கேட்கிறாராம். ஆனால், சர்தார் 2-ல் பிஸியாக இருக்கும் கார்த்தி, இப்போது கால்ஷீட் தர முடியாது என அடம் பிடிக்கிறாராம். இருவரும் மாறி மாறி இழுத்தடிப்பதால், படம் எப்போது வெளிவரும் என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.
News April 26, 2025
பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.