News March 28, 2024
அருணாச்சல் முதல்வரின் சொத்து 100% அதிகரிப்பு

அருணாச்சல் பிரதேச பாஜக முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 100% அதிகரித்துள்ளது. அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாண பத்திரத்தில் ரூ.277 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2019 தேர்தலில் ரூ.132 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தார். அதனுடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகமாகும்.
Similar News
News January 23, 2026
2 கொலையாளிகள்.. ஜெயிலில் காதல், பரோலில் திருமணம்!

ராஜஸ்தான் சங்கானேர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் பிரியா சேத் & ஹனுமான் பிரசாத் ஆகியோருக்குள் காதல் மலர்ந்துள்ளது. டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞரை பிரியாவும், Ex காதலியின் கணவர் & அவரின் 3 குழந்தைகளை ஹனுமானும் கொலை செய்துள்ளனர். திருமணம் செய்ய முடிவு செய்து ஐகோர்ட்டை அணுக, அவர்களுக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
News January 23, 2026
கூட்டணி ஆட்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாரா EPS?

கூட்டணி ஆட்சி பற்றி தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். இதற்கு தோதாக EPS இடம் பாஜக 3 இலாகாக்களை கேட்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு EPS மறுப்பு தெரிவிக்காததால் டெல்லி தலைமை கூட்டணி ஆட்சியை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம். இதேபோல அமமுகவுக்கு 1 அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து ஆலோசனை நடந்துவருவதாக பேசப்படுகிறது.
News January 23, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சியில் டிச.30-ல் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளை(சனிக்கிழமை) வேலை நாளாகும். ஆனால், அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். ஏனென்றால், அரையாண்டு விடுமுறை சமயத்தில் தான் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், நாளை பள்ளிகள் இயங்காது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. SHARE IT.


