News August 8, 2024
100% மாணவர் சேர்க்கையை எட்ட வேண்டும்!

பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை 100% மாணவர் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆர்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% கட்டணமில்லா இடங்கள் ஒதுக்கீடு செய்வதை சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை எனக் கூறிய அவர், எல்லோருக்கும் 12ஆம் வகுப்பு வரை கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 11, 2026
இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


