News January 28, 2026

’10-3-2-1-0′ தூங்கும் முறை தெரியுமா?

image

இரவில் நன்றாக தூங்க இந்த ’10-3-2-1-0′ முறை உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். படுக்கைக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காபி குடிப்பதையும், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதையும், படுக்கைக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும். படுக்கைக்கு 1 மணி நேரத்திற்கு முன் போனை ஓரம் வைத்துவிட்டு, 0 – காலை அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் உறங்காமல் எழுந்திருங்கள்.

Similar News

News February 20, 2026

தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க கோரும் ராமதாஸ்

image

பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சென்னை HC-ல் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ECI சூழ்ச்சியால் மாம்பழம் சின்னம் முடங்க வாய்ப்புள்ளதாகவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அன்புமணியை பாமகவின் தலைவர் என ECI அங்கீகரித்ததை எதிர்த்து சென்னை HC-ல் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 20, 2026

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கும் NMMS தேர்வு ஜன.10-ல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

News February 20, 2026

விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு சாதகம்: துரை வைகோ

image

தமிழ்நாட்டுக்கு பாஜக இழைத்த அநீதிகள் குறித்து விஜய் வாய்திறக்கவில்லை என துரைவைகோ குற்றம்சாட்டியுள்ளார். 2026 தேர்தலில் விஜய் 15% வாக்குகள் வாங்கலாம், ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், திமுக ஆட்சியின் மீது உள்ள அதிருப்தி வாக்குகளையே விஜய் பிரிப்பார் என நம்புவதாகவும், அது திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!