News December 29, 2025

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள https//wwwahd.tn.gov.in.jallikattu என்ற இணையதள முகவரியின் Event Registration ல் இணைப்பில் கண்டுள்ள உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி  தெரிவித்துள்ளார்

Similar News

News January 6, 2026

வேலூர்: குடியிருப்பில் புகுந்த பாம்புகள் பரபரப்பு!

image

வேலூரில் ஒரே நாளில் தீயணைப்பு துறையால் 5 பாம்புகள் வெவேறு இடங்களில் பிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருமுகையில் ஒரு வீட்டில் சாரைப்பாம்பு, கிரீன்சர்க்கிள் பகுதியில் கொம்பேரி மூக்கன் பாம்பு. பாகாயத்தில் வீட்டில் நல்ல பாம்பு, அரியூர் பகுதியில் சாரைப்பாம்பு, ஓல்டு டவுன் பகுதியில் மற்றோரு சாரைப்பாம்பு என் வீடுகளுக்குள் புகுந்த 5 பாம்புகளை மீட்டு அதிகாரிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News January 6, 2026

வேலூரில் நள்ளிரவில் திகில்!

image

காட்பாடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மதுபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அசோக் நகரை சேர்ந்த மகேந்திரன் (23) என்பதும், அவர் மீது திருட்டு, வழிப் பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.

News January 6, 2026

வேலூர்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பெண்ணால் பரபரப்பு

image

கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியில் ரேவதி (35) என்பவர் கணவரை இழந்து ஆதரவின்றி சுற்றி திரிந்தார். உண்ண உணவு கூட இல்லாத நிலையில் இருந்த அவரை அப்பகுதி போலீசார் மீட்டு காட்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வலி அனுப்ப வந்த போலீசாரை ஏமாற்றி ரேவதி தப்பி ஓடினார். ரேவதியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!