News March 19, 2024
விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் போட்டி

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது அங்கு எம்பியாக உள்ள ரவிக்குமாரே மீண்டும் களம் காண்கிறார். கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நின்ற அவர் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் பாமக இங்கு களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2025
சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News April 10, 2025
பாமக தலைவராக நானே தொடருவேன் ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும், சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை,பதவி பெரும் ஆசை எனக்கு இல்லை என்றும்,2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.