News January 4, 2026
விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க.
Similar News
News January 6, 2026
விருதுநகர் அருகே இளைஞர் படுகொலை

காரியாபட்டி தாலுகா ஆவியூர் கிராமத்தில் இன்று காலை ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த இராசுதேவர் என்பவர் மகன் இராமசாமி (32) கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

விருதுநகர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
News January 6, 2026
விருதுநகர்: போலீஸ் பயிற்சி பள்ளி மாணவி படுகொலை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


