News December 31, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 7, 2026
ராணிப்பேட்டை:நேரலையில் கலந்து கொண்ட கலைஞர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கைவினைத் தொழில் முனைவோர் வெற்றி விழாவின் நேரலை, ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.07) ஒளிபரப்பப்பட்டது. இதில் கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டப் பயன்களை அறிந்து கொண்டனர்.
News January 7, 2026
ராணிப்பேட்டை:டிகிரி போதும்..ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை!

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.
News January 7, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலக்டர்!

திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில், முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. 2026-ம் ஆண்டிற்கான விருது பெறுவதற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை சேர்ந்த திருநங்கைகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்


