News September 27, 2025
ராணிப்பேட்டை: எம்எல்ஏ சு.ரவி திடீர் ஆய்வு

நேற்று செப்டம்பர் 26 அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனையில் , தலைமை மருத்துவர் நிவேதிதா சங்கர் உடன் ஆலோசனை மேஇருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவசர நோயாளிகள் பிரிவு தீவிர சிகிச்சை பிரிவு புறநோயாளிகள் பிரிவு என அனைத்து பகுதிகளிலும் சென்று மருத்துவர்களிடம் பேசி ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.
Similar News
News January 28, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற ஜன30ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதை மாவட்ட கலெக்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள் விவசாயிகள், விவசாய சங்கத்தினரின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். ஆகையால், மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தவறாது இதில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News January 28, 2026
அரக்கோணத்தில் சாலை விபத்து!

ராணிப்பேட்டை: அரக்கோணம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வாலிபர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். காயமடைந்த அவரை அன்னை தெரசா அறக்கட்டளையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


