News January 22, 2026
ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி – பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
அரக்கோணத்தில் சாலை விபத்து!

ராணிப்பேட்டை: அரக்கோணம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வாலிபர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். காயமடைந்த அவரை அன்னை தெரசா அறக்கட்டளையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!