News January 17, 2026

முகமது அலி பொன்மொழிகள்

image

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.

Similar News

News February 9, 2026

‘நான் சாகப் போகிறேன்’

image

‘பெற்றோர் பேச்சை கேட்காமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விடைபெறுகிறேன்’. ஆந்திராவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பத்மாவின்(28) கடைசி வரிகள் இவை. கணவன் வேலைக்குச் செல்லாமல் ஊரை சுற்றி கடன் வாங்கியதால், அப்பெண் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. உணருங்கள்!

News February 9, 2026

அரசுப் பள்ளியில் மாணவி மரணம்

image

நாமக்கல்லில் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரக்‌ஷிதா என்ற மாணவி, ஆண்டு விழாவிற்காக நடன பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். அப்போது எமனாக வந்த விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதில் வலியில் துடிதுடித்துப்போன மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 9, 2026

NDA கூட்டணியில் தேமுதிக.. முடிவை கூறிய L.முருகன்

image

தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்கவே இருகட்சிகளும் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக L முருகன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக NDA கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!