News November 23, 2025
மலேசியா விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது கான்சர்ட் போன்ற ஸ்டைலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஆரம்பத்தில் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் விஜய் பாடல்களை பாடி விட்டு, அதன்படி ஆடியோ லான்ச் நடத்த திட்டமிடப்படுள்ளது. இதற்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பாஸ்கள் விற்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News January 31, 2026
இரவில் தூக்கம் வராது.. இதெல்லாம் சாப்பிடாதீங்க

சில உணவுகளை இரவில் சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சாக்லேட், காபி போன்றவற்றில் காஃபின் இருப்பதால், அவற்றை உண்டால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். மேலும், காரமான உணவுகள், சீஸ் கலந்த உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை இரவில் சாப்பிட்டால், அவற்றில் இருக்கும் நீர்ச்சத்து அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டி, தூக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்.
News January 31, 2026
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் உறைபனி தொடங்கியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் முடிந்தளவு காலையில் வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!
News January 31, 2026
நம்பர் 1 இடத்தில் கிங்.. 2-வது இடத்தில் மிஸ்டர் கூல்

Marketing mind வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய விளம்பர திரை நேரத்தில் ஷாருக்கான் 8% பங்களிப்போடு முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது விளம்பரங்கள் அனைத்து சேனல்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு 27 மணிநேரம் ஒளிபரப்பப்படுகிறது. தோனி 2-வது இடத்தில் உள்ளார். அவரது விளம்பரங்கள் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் ஒளிபரப்பாகிறது. அதைத் தொடர்ந்து அக்ஷய், ரன்வீர், அமிதாப், அனன்யா, ரன்பீர் ஆகியோர் உள்ளனர்.


