News August 20, 2025
மனித நேய ஜனநாயக கட்சி பதில் அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சென்னையில் உள்ள முதன்மைத் தேர்தல் அலுவலகத்தில் வரும் 26.8.25ஆம் தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும் கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித தேர்தலிலும் பங்கேற்காததன் காரணத்தை விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று (ஆக.20) தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; அதிரடி தீர்ப்பு

புதுவயலை சேர்ந்த கூலித்தொழிலாளி அடைக்கலம், இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை துாக்கி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அடைக்கலத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ 5 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
News February 1, 2026
சிவகங்கை: Spam Calls-க்கு இனி END CARD

சிவகங்கை மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News February 1, 2026
சிவகங்கை: ரயில் பயணிகள் கவனத்திற்க்கு…

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16352 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் பிப்-5, 8, 12, 15, 19, 22, 26 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


