News February 7, 2026

பெற்றோரை கவனிக்க 45 நாள்கள் கட்டாய விடுப்பு

image

அரசு, தனியார் ஊழியர்களுக்கு 60 வயதை எட்டிய பெற்றோரை கவனித்துக்கொள்ள 45 நாள்கள் விடுப்பு வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் உ.பி. MP சுமித்ரா முன்மொழிந்துள்ளார். தற்போது, ​​நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 14.9 கோடியாக உள்ளது என்ற அவர், 2036-க்குள், இது 23 கோடியை தாண்டும் என்றார். மேலும், ​​வேலை அழுத்தம் காரணமாக பெற்றோரை கவனிப்பது கடினமாகிறது, அதனால் இந்த விடுப்பு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News February 17, 2026

காலையில் இதை செய்தால் வெயிட் லாஸ் நிச்சயமாம்!

image

எப்படியாவது உடல் எடையை குறைத்திட வேண்டும் என எண்ணுபவர்கள் உடற்பயிற்சியுடன், சில பழக்க வழக்க மாற்றங்களையும் செய்திட வேண்டும். குறிப்பாக, காலையில் உங்களின் சில பழக்கங்களை மாற்றினால், உடல் எடை விரைவில் குறையும் என டாக்டர்கள் டிப்ஸ் அளிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் கமெண்ட்ல பதிவிடவும்.

News February 17, 2026

தவெகவில் இணைந்த அதிமுக EX அமைச்சர்!

image

செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் வரிசையில் அதிமுக EX அமைச்சர் ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்துள்ளார். 2011- 16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ந.சுப்பிரமணியன், நேற்றிரவு விஜய்யை சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். புதுக்கோட்டையை சேர்ந்த இவர், 2011-ல் கந்தர்வக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

News February 17, 2026

ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த இந்தியா

image

மும்பையில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் டேங்கர்களை இந்திய கடற்படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பல்கள் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடற்படையிடம் இருந்து பிடிபடுவதை தடுக்க அடிக்கடி அடையாளத்தை மாற்றும் இந்த கப்பல் இந்தியன் கடற்படையிடம் சிக்கியுள்ளது.

error: Content is protected !!