News July 5, 2025
பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடிய மைக்ரோசாஃப்ட்

உலகளவில் மிகப்பெரிய IT நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
ஜூன் 23-ல் டிரிபிள் டிரீட்… ரசிகர்களே!

ஜூன் 23 சூர்யா ரசிகர்களுக்கு 3 சூப்பரான அப்டேட் வருதாம். தமிழில் RJ பாலாஜி, தெலுங்கில் வெங்கி அட்லூரி, மலையாளத்தில் ஜீத்து மாதவன் என அடுத்தடுத்து 3 பேருடன் இணைகிறார் சூர்யா. அவரது பிறந்தநாளில் இந்த 3 படங்களிலிருந்தும் அப்டேட் வரப்போகிறதாம். கருப்பு படத்திலிருந்து கிளிம்ஸ், வெங்கி படத்தின் போஸ்டர், ஜீத்து மாதவன் பட அறிவிப்பு என வருகிறது என்கிறார்கள். நீங்க எந்த படத்துக்கு வெயிட்டிங்?
News July 5, 2025
டி20 தொடர்.. இங்கிலாந்து முதல் வெற்றி..

இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் சோபியா மற்றும் டேனியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் ஸ்மிருதி, ஷஃபாலி தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
News July 5, 2025
தவெகவின் 2-வது மாநில மாநாடு.. லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்த நிலையில், அடுத்த மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என இன்று செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாநாட்டில் அரசியல் எதிரிகள் குறித்து விஜய் பேசியது கவனிக்கப்பட்டது. 2வது மாநாடு நடைபெறும் இடம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மதுரைதான் விஜய்யின் சாய்ஸாம்.