News February 11, 2026
பள்ளி மாணவர்கள் 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, உ.பி.,யில் பள்ளி மாணவர்களுக்கு Albendazole மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் 120 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்களுக்கு இம்மாத்திரை அளிக்கப்படும் சூழலில், மாத்திரையால் பிரச்னை இல்லை எனவும் வேறு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க இதை செய்யுங்க!

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். 7-8 மணி நேரம் தூங்குங்கள். *மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். *கோழி, மீன், பாதாம், முந்திரி, சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். *புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும். இவற்றின் மூலம், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
News February 17, 2026
புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.
News February 17, 2026
பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சி: அன்புமணி

பாமக-க்குள் இருக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சுற்றியுள்ள திமுகவின் கைக்கூலிகள் சூழ்ச்சி செய்து பாமக பலவீனப்படுத்த நினைக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார். இந்த காரணத்துக்காகத்தான் திமுகவை வீட்டுக்கு அனுப்ப நல்ல கூட்டணிக்கு பாமக சென்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


