News November 6, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. அறிவித்தது அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, 5,322 அரசுப் பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ₹127.57 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2026- 27-க்குள் இந்த வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 2, 2026
சேலம்: ரூ.15 லட்சம் வரை கடன் வேனுமா?

சேலம் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 2, 2026
சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
News March 2, 2026
3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.


