News November 6, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. அறிவித்தது அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, 5,322 அரசுப் பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ₹127.57 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2026- 27-க்குள் இந்த வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று மாலை படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்த சில மணி நேரத்தில் ஃபஸ்ட் சிங்கிள் அப்டேட்டையும் கொடுத்து படக்குழு திக்கு முக்காட வைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜன.9-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
FLASH: விலை ஒரே அடியாக ₹2,000 உயர்ந்தது

<<18217339>>தங்கம்<<>> விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹1,000 அதிகரித்திருந்தது. இந்நிலையில், மாலையில் மேலும் ₹1,000 உயர்ந்து நடுத்தர மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் வெள்ளி ₹165-க்கும், 1 கிலோ ₹1.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News November 6, 2025
பிரபல ராப் பாடகர்கள் PHOTOS

பீட்ஸ், ரிதமிக் வார்த்தைகள், வேகமாக பாடுவது ஆகியவை ராப் இசை மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகம் முழுவதும் ராப் இசைக்கு பல மொழிகள் இருந்தாலும், ஹே, யோ – என்பது ராப் கலையின் அடையாளமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் சில ராப் இசை கலைஞர்களின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த ராப் பாடல் எது? கமெண்ட் பண்ணுங்க.


