News April 24, 2024

பக்தர்கள் செல்ல தடை

image

சேலம் மாவட்டம், கஞ்சமலை மேல் சித்தர் கோயில் கஞ்சமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மர்ம நபர்கள் மலை உச்சியில் தீ வைத்ததால் தீ பரவி வருவதையொட்டி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

Similar News

News November 8, 2025

சேலத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை

image

தமிழகம் வழியாக புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான ரயில் நாளைய தினம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ரயிலின் நேர அட்டவணையை, காலை 5.10 மணிக்கு கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.23 மணிக்கு சேலம், 9 மணிக்கு திருச்சூர், பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்

News November 7, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News November 7, 2025

JUST IN:சேலத்தில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

image

சேலத்தில் நவீன வசதிகள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் ரூ. 73 கோடி மதிப்பீட்டில் பாரதிதாசன் பெயரில் சேலத்தில் நூலகம் அமைப்பதற்கான டெண்டரை (Tender) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்த பிறகு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, இந்த நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!