News February 21, 2026
தேனி மக்களுக்கு காவல்துறை புகார் எண்கள் அறிவிப்பு

தேனியில் நாளுக்கு நாள் போதை பொருள், புகையிலை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சட்ட விரோத மதுவிற்பனை, கஞ்சா (ம) போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 93638 73078 என்ற WhatsApp எண்ணிற்கோ (அ) கட்டணமில்லா தொலைப்பேசி எண் 10581 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு. SHARE
Similar News
News February 21, 2026
தேனி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

தேனி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 21, 2026
தேனி: ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலி

தேனியை சேர்ந்தவர் சங்கரகுமார். இவர் குடும்பத்துடன் ஏரல் சேர்மன் கோயிலுக்கு சென்றவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை 4 மணி அளவில் குடும்பத்தோடு குளித்தார். அப்போது சங்கரகுமாரின் மகள்கள் அபிநயா (16), மீனாட்சி (12) ஆகியோர் ஆற்றில் குளித்த போது மூழ்கினர். ஏரல் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News February 21, 2026
தேனி மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் குமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் தங்களது அனைத்து அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.


