News January 10, 2026
திருமூர்த்தி அணை பகுதியில் ஆண் சடலம் மீட்பு

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் 71-வயது முதியவர் ரத்த காயங்களுடன் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Similar News
News January 29, 2026
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 29, 2026
சிவன்மலை செல்வோர் கவனத்திற்கு!

திருப்பூர், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தேர் திருவிழா, தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பிப்.1,2,3 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வந்துசெல்வர் என்பதால், மலை மீது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த 3 நாட்களுக்கு, தனியார் வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிகப்படுவதாக, சிவன்மலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


