News January 3, 2026
டிமாண்டை மேலும் அதிகரித்த காங்கிரஸ்

திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி எனவும், குறைந்தபட்சம் வாய்வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை, ப.சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Similar News
News January 6, 2026
வெளிநாட்டு ராணுவத்தில் லாலுவின் பேரன்

லாலு பிரசாத் யாதவின் பேரன் ஆதித்யா வெளிநாட்டு ராணுவத்தில் பணியாற்றவிருப்பது பேசுபொருளாகியுள்ளது. சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட ஆதித்யா, அந்நாட்டு விதிகளின்படி 2 ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும். இதுபற்றி ஆதித்யாவின் தாய் ரோகிணி X-ல் உருக்கமாக பதிவிட்டதற்கு, நெட்டிசன்கள் அவரை சாடுகின்றனர். பிறப்பால் இந்தியரான நீங்கள், இந்த விஷயத்தில் பெருமைகொள்வது சரியா என கேள்வி கேட்கின்றனர்.
News January 6, 2026
படையப்பா ரீ-ரிலீஸ் வெற்றிக் கொண்டாட்டம் (PHOTOS)

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரீ-ரிலீசான ‘படையப்பா’ 25 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றியை ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அதில் மூவரும் சேர்ந்து படையப்பா ஸ்டைலில் சல்யூட் அடிக்கும் போட்டோஸ் SM-ல் வைரலாகியுள்ளது. நீங்கள் படையப்பா ரீ-ரிலீசை குடும்பத்துடன் ரசித்துப் பார்த்தீங்களா?
News January 6, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

டிசம்பரில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை, ஜனவரியில் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 20 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 20 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கல்லில் தற்போது 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இனி விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


