News June 14, 2024

சேலத்தில் இன்றைய வெப்ப நிலவரம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Similar News

News March 2, 2026

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 36,713 பேரும், 829 தனித்தேர்வர்களும் என மொத்தம் 153 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 200 பறக்கும் படைகள் உட்பட 3,587 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வு எழுதப் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

News March 2, 2026

ஆத்தூரில் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

image

ஆத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தேவி (36). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்த தேவி, நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 2, 2026

ஆபாச நடனம்: சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

image

சேலம்: சேலதாம்பட்டி கோயில் விழாவில், ஆபாசமாக நடனமாடியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வினோத்குமார் என்பவர் அளித்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், நடனக் குழுவைச் சேர்ந்த கார்த்தி, அஸ்வினி, நிகிதா, மற்றும் ஹேமா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!