News March 18, 2024
சேலத்திற்கு படையெடுக்கும் தலைவர்கள்

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) பா.ஜ.க. சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சேலம் வந்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 13, 2026
சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 13, 2026
BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

சேலத்தில் தவெக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிராஜ் (37) என்ற கூலித்தொழிலாளி கடுமையான நெரிசல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
News February 13, 2026
BREAKING: சேலம் வந்தார் விஜய்

சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சேலம் வந்தடைந்தார். அவருக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், விஜய் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


